Payment assistance in Tamil


கொடுப்பனவு ஆதரவு

உங்களது தண்ணீர், கழிவுநீர் கொடுப்பனவுப் பட்டியலைச் சமாளிக்க உதவும் உபாயங்கள்.

மேலதிக தகவல்களைப் பெற வருகை தரவும் solutionsontap.com.au

உங்கள் கணக்கைச் சமாளிக்க உபாயங்கள்

உங்கள் தண்ணீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களைச் செலுத்த உதவும் பல்வேறு உபாயங்களை நாம் வழங்குகிறோம்.

பணம் செலுத்தும் திட்டங்கள்

இருவார அல்லது மாதாந்த கட்டங்களைச் செலுத்தக்கூடிய ஒரு திட்டத்தின்படி நீங்கள் உங்கள் கட்டணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

பணம்செலுத்தும் திட்டம் ஒன்றை உருவாக்கப் போய்ப்பார்க்கவும்: mysoutheastwater.com.au அல்லது 131 851 இல் எமக்கு ஒர் அழைப்பு தரவும் (உரைபெயர்ப்பாளர் சேவை கிடைக்கும்).

Centrepay

உங்களது Centrelink கொடுப்பனவுகளிலிருந்து (உங்களுக்கு இவை கிடைத்தால்) பணத்தை எடுத்து ஒழுங்காகச் செலுத்துவதற்கான இலவச சேவைதான் Centrepay ஆகும். அத்துடன், இது நேரடியாக உங்கள் தண்ணீர் மற்றும் கழிவுநீர் கட்டணப் பட்டியலில் போடப்படும். மேலதிக தகவல்களுக்கு வருகை தரவும்: centrelink.gov.au அல்லது உரைபெயர்ப்பாளர் ஒருவருடன் கலந்துரையாட அழையுங்கள்131 202.

mySouthEastWater

mySouthEastWater இலகுவானது, பாதுகாப்பானது அத்துடன் நேரடியாக (online) 24/7 உங்கள் கணக்கை நிர்வகிப்பதற்கு வசதியான வழியாகும். இணைந்து கொள்ளவும்:

  • உங்கள் கட்டணங்களைச் செலுத்தவும், கடந்தகாலக் கொடுப்பனவுகளைச் சரிபார்க்கவும்.
  • உங்கள் சலுகை தகவல்களைப் பதிவுசெய்ய
  • நேரடியாகக் கழிக்க அல்லது ஒரு கொடுப்பனவு திட்டத்தை உருவாக்க
  • பத்திரங்களிலிருந்து மின்அஞ்சல் கட்டணப்பட்டியலுக்கு மாற்ற
  • உங்கள் தகவல்கள், வேறுவிடயங்களைப் புதுப்பிக்க.

மூன்று சுலபமான வழிகளில் mysoutheastwater.com.auஇல் பதிவுசெய்யவும்.

பணம் செலுத்த நீண்ட நேரம்

கொடுக்க வேண்டிய தினத்தில் உங்களால் பணம் செலுத்த இயலாமல் போய்விட்டால், தயவுசெய்து, 131 851 க்கு இயலக்கூடியளவு விரைவாக அழைத்தால், நாம் ஒன்றாகச் செயற்பட்டு, பொருத்தமான ஒரு தீர்மானத்தைக் காணலாம்.

உங்களுக்குத் தேவையானபோது ஆதரவளித்தல்

 


 
Was this article helpful?
       

Feedback

That’s embarrassing, sorry we couldn’t help.
Please let us know how we can improve this answer.

Please email us if you need to contact us further about your enquiry.